Thursday, 10 November 2016

Tag


Saturday, 27 February 2016

VAO தேர்வு வினாத்தாளில் மாற்றம்

ராமநாதபுரம் :முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.ஒரு தேர்வு அறையில் 20 பேர் அமரும் போது ஒரே விதமான வினாத்தாள் 5 பேருக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வினாத்தாள்களில் விடைகளை குறித்து, மற்றவர்களுக்கு வழங்குவதாகவும், சைகை மூலம் விடைகளை தெரிவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை தடுக்க வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, பழைய முறையில் தயாரிக்கப்படவில்லை. உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்று சீரியல் எண் மட்டும் உள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.

இதில் ஒரு அறையில் உள்ள அனைவருக்கும் வெவ்வேறான விதமான வினாத்தாள் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்வி எண் மாறுபடுவதால் முறைகேடு செய்ய முடியாது.மேலும் தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Saturday, 16 January 2016

சிவில் சர்வீசஸ் தேர்வூ எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகை மாநில அரசு திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகை மாநில அரசு திட்டம் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.ரூ.10 ஆயிரம் உதவித்தொகை மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.இ.) சார்பில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகிய உயர் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்த தேர்வில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.எனவே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மராட்டிய அரசு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கதொகை வழங்க திட்டமிட்டது.

இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பயிற்சி மையங்கள் இதற்காக மும்பை, நாக்பூர், கோலாப்பூர், அமராவதி, அவுரங்காபாத், நாசிக் ஆகிய பகுதிகளில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இந்த புதிய திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.23.46 கோடி கூடுதல் செலவாகும் என்று அரசு அறிவித்துள்ளது.